“நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!” – யாக் 3:6
எதிர்மறை கூற்றுகள் எதிர்மறையான எண்ணங்களுடன் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியர், தான் பணிபுரியும் நிறுவனம் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக, ஒரு வதந்தியைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
எனவே அவர், ஒவ்வொரு முறையும் காரியங்கள் சரியாக நடக்கத் தொடங்கும் போது, மோசமான ஒன்று நடக்கும் என்று கூறுகிறார். பின்னர் “நான் என் வேலையை இழக்க நேரிடும்.” என்று கூறுகிறார்.
என் எண்ணங்கள் மிகவும் எதிர்மறையாக இருந்தது. அது என் வார்த்தைகளை எதிர்மறையாக இருக்கும் படி செய்தது … இவை அனைத்தும் என் வாழ்க்கையில் மோசமாக பிரதிபலித்தது.
இறுதியாக, நான் என் வழிகளை மாற்ற முடிவு செய்தேன். அதனால் எதிர்மறையாக பேசுவதை நிறுத்தினேன். பின்னர், எதிர்மறையாக பேசுவதை விட அதிகமாக நான் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன். எதிர்மறையான பேச்சைத் துண்டித்துக் கொள்வதுடன், நேர்மறையாக சிந்திக்கத் தொடங்கினேன்!
நம் எண்ணங்கள் நேர்மறையோ அல்லது எதிர்மறையோ ஆனால் அவை நம் எதிர்காலத்தை வடிவமைக்கும் வார்த்தைகளை பேச வைக்கின்றது. நாம் தவறான விஷயங்களைப் பேசும் போது, அது நம் வாழ்வில் நெருப்பைப் போல இருக்கலாம் (யாக்கோபு 3:6 ஐக் காண்க).
ஆனால் சரியாகப் பேசுவதன் மூலம், அந்த நெருப்பு தொடங்குவதற்கு முன்பு அதை நிறுத்த முடியும். நாம் சரியாக நினைக்கும் போது மட்டுமே சரியாக பேச முடியும். நீங்கள் பரிசுத்த ஆவியினாலும், கடவுளுடைய வார்த்தையினாலும் நிரம்பி இருக்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அவரே உங்கள் எண்ணங்களை ஏற்படுத்தி, நேர்மறையான வார்த்தைகளைப் பேசும் வாழ்க்கை முறைக்குள் உங்களை நடத்துவாராக.
ஜெபம்
தேவனே, உம்முடைய வார்த்தையின் அடிப்படையில் நேர்மறையான, ஜீவனை கொடுக்கும் வார்த்தைகளை நான் பேச விரும்புகிறேன். நான் உம்மை என் சிந்தனை வாழ்க்கைக்குள் அழைக்க விரும்புகிறேன். ஒரு புதிய மனதை, கிறிஸ்துவின் மனதைப் பெற, விரும்புகிறேன். இதனால் என் வாயின் வார்த்தைகளால் உம்மைப் பிரியப்படுத்த முடியும்.