“நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.” – உபா 31:6
தனிமை பெரும்பாலும் ஒரு உள்ளான வலியாக, வெறுமையாக அல்லது பாசத்திற்கான ஏக்கமாக உணரப்படுகிறது. அதன் பக்க விளைவுகளில் வெறுமை, உபயோகமற்ற தன்மை மற்றும் நோக்கமற்ற தன்மை ஆகியவை அடங்கும். தனிமைக்கு பல காரணங்கள் உண்டு, ஆனால் பலர் அதனுடன் வாழ வேண்டியதில்லை என்பதை உணரவில்லை. அவர்கள் அதை எதிர்கொண்டு அதை சமாளிக்க முடியும்.
நீங்கள் தனியாக இருப்பதால், நீங்கள் தனிமையாகவோ அல்லது தனிமையிலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் தனியாக இருப்பதைத் தவிர்ப்பது எப்போதுமே சாத்தியமில்லை, தனிமையால் ஒடுக்கப்படுவதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது.
தேவனுடைய வார்த்தை நம்மை பெலமுள்ளவர்களாகவும், தைரியமுள்ளவர்களாகவும் இருக்கும்படி சொல்லுகிறது, ஏனென்றால் தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சரீரப் பிரகாரமாக, நீங்கள் தனியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால் ஆவிக்குறிய ரீதியில், தேவன் எப்போதுமே உங்களுடன் இருக்கிறார். அவர் உங்களை ஒரு போதும் விட்டு விலக மாட்டார், கைவிடவும் மாட்டார்.
அடுத்த முறை தனிமை உணர்வு உங்கள் வாழ்க்கையில் வரும் பொழுது, உபாகமம் 31:6 ஐ நினைத்துக் கொள்ள உங்களை கேட்டுக்கொள்கிறேன். தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று சத்தமாக அறிவித்து அவருடன் பேசத் தொடங்குங்கள். நீங்கள் அவருக்கு இடமளிக்கும்போது, அவருடைய பிரசன்னம் உங்கள் வாழ்க்கையை நிரப்பும். நீங்கள் எங்கு சென்றாலும் கடவுளின் பிரசன்னம் உங்களுடன் இருக்கும்போது நீங்கள் தனிமையாக இருக்க வேண்டியதில்லை.
ஜெபம்
தேவனே, நீர் எப்போதும் என்னுடன் இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நீர் என் அருகில் இருக்கும் போது, நான் ஒருபோதும் தனிமையை உணர வேண்டியதில்லை என்று அறிந்திருக்கிறேன்.