
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16)
மக்கள் தங்கள் ஜெப வாழ்க்கையில் சிரமப்படுகையில், அவர்கள் பரிசுத்தமற்றவர்களாகவும், அநீதியுள்ளவர்களாகவும் இருப்பதனால் தான் அப்படி சிரமப்பட வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறார்கள், அதனால் அவர்கள் சிறப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள், அப்போது தங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
மறுபடியும் பிறக்கும் போது, நாம் நீதிமான்களாகிறோம் என்பது உண்மை. நாம் எல்லாவற்றையும் சரியாக செய்யாமல் இருக்கலாம்; ஆனால் நாம் கிறிஸ்துவின் மூலம் 100 சதவீதம் நீதிமான்கள். இரண்டாம் கொரிந்தியர் 5:21 நமக்குச் சொல்கிறது, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படி, பாவம் அறியாதவரை நமக்காகப் பாவமாக்கினார்”. நீதிக்கும், “சரியான” நடத்தைக்கும் வித்தியாசம் உள்ளது. இயேசுவின் இரத்தத்தின் காரணமாக – தேவனுக்கு முன்பாக நம்முடைய நிலையை நீதி விவரிக்கிறது. நம்மை நாமே நீதிமான்களாக்க முடியாது; நாம் ஒருபோதும் பாவம் செய்யாமலில்லை, இயேசுவின் இரத்தம் மட்டுமே நம்மை நீதிமான்களாக்குகிறது. நாம் தவறு செய்தாலும் தேவன் நம்மை நீதிமான்களாகவே பார்க்கிறார். அவர் நம்மை நீதிமான்களாகப் பார்ப்பதால், ஜெபிப்பதற்கும், கடவுள் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கவும், நமக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் கடவுளை நேசிப்பதால் ஒழுங்காக நடந்துகொள்ள உங்களால் முடிந்ததை எப்போதும் செய்யுங்கள், ஆனால் அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் நல்லவர், நீங்கள் ஒழுங்காய் நடந்து கொள்வதால் அல்ல.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளின் கிருபையால் நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.