
“அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” – அப்போஸ்தலர் 4:31
பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொண்டு அனுதினமும் அவரது வழிகளை தொடர்வது மூலமாகவும் அவரால் நிறைந்திருப்பதை அறியாத அனேக சந்தோசமற்ற மறுபிறப்படைந்த ஆவியால் நிறைந்த அனேக கிறிஸ்தவர்கள் உண்டு. பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே இருக்கிறார், ஆனால் அவர் இருப்பதின் அடையாளத்தை தங்கள் அனுதின வாழ்வில் காண்பிக்க மாட்டார்கள்.
ஒரு ஜாடியை முழுவதும் நிரப்பாமல் பாதி வரை நிறைப்பது சாத்தியமானதே. அதேபோல் நாம் மறுபிறப்பு அடையும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே இருக்கிறார். ஆனால் நாம் முழுவதுமாக நிரப்பப்படாமல் இருக்கலாம். நம் வாழ்விலே அவரது வல்லமை வெளிப்படாமல் இருக்கலாம்.
அப்போஸ்தலர் 4:13 சொல்வதாவது. மக்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போது அவர்கள் தேவனுடைய வார்த்தையை விடுதலையோடும் தைரியத்துடனும் பேசினர்.
மக்கள் அவரை தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே விட்டு விட்டு, பின்னர் அவரை பிரியப்படுத்த ஏதோ மத சார்புடைய சூத்திரங்களை பின்பற்ற முயலுவது அவரைப் பிரியப்படுத்தாது. நாம் ஆவியால் நிறைந்து விடுதலையோடும் தைரியத்தோடும் வாழவே அவர் விரும்புகிறார்.
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், தேவன் சுதந்திரத்துடன் கிரியை செய்ய நீங்கள் அனுமதிக்க உங்களை வற்புறுத்துகிறேன்.
ஜெபம்
பரிசுத்த ஆவியால் அன்றாடம் நிரப்பப்பட விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரால் நான் பெற்றுக் கொள்ளக்கூடிய விடுதலை, தைரியத்துடன் அனுதினமும் வாழ எனக்கு உதவுவீராக.