“அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” – யோவாண் 20:22
நாம் மன்னிக்கும் இருதயத்துடன் வாழ வேண்டுமென தேவன் விரும்புகிறார். நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து எந்தவொரு குற்றத்தையும் மன்னிக்க வேண்டும்.
பிசாசு நம் எண்ணங்களை கசப்புடன் விஷமாக்க எவ்வளவு முயன்றாலும், மன்னிப்பதை நாமனைவரும் மனமுவந்து தெரிந்து கொள்ள வேண்டும். இது செயல்படுத்துவதை விட சொல்வதற்கு மிகவும் எளிதானது. ஆனால் நீங்கள் அதை உங்கள் சொந்த முயற்சியிலேயே செய்ய வேண்டுமென தேவன் எதிர்பார்க்கவில்லை.
பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமல் உங்களால் மன்னிக்க முடியாது. நீங்களாக மன்னிப்பது மிகவும் கடினம், ஆனால் நீங்கள் உண்மையிலேயே விரும்புவீர்களென்றால், அவர் உங்களுக்கு உதவ ஆவியானவரை அனுப்புவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களைத் தாழ்த்தி கொண்டு, உதவிக்காக அவரிடம் வேண்டுதல் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
யோவான் 20:22-ல், இயேசு சீஷர்கள் மீது ஊதி, “பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அவருடைய அடுத்த அறிவுறுத்தல் மக்களை மன்னிப்பதைப் பற்றியது. அவர் உங்களிடமும் அதையே சொல்கிறார். அவர் உங்களை பரிசுத்த ஆவியினால் நிரப்ப விரும்புகிறார், நீங்கள் மற்றவர்களை மன்னிக்க உதவுகிறார். ஆனால் நீங்கள் அவரிடம் கேட்டுப் பெற வேண்டும். நீங்கள் தயாராக இருந்தால், உங்கள் இருதயத்தில் உள்ள எந்தவொரு கசப்பையும், மன்னிப்பையும் அகற்றுவதற்கான வல்லமையை கடவுள் உங்களுக்கு வழங்க முடியும்.
பரிசுத்த ஆவியை உங்கள் மீது ஊற்றும்படி கடவுளிடம் கேளுங்கள். அப்பொழுது உங்களை காயப்படுத்தியவர்களை நீங்கள் மன்னிக்க முடியும்.
ஜெபம்
தேவனே, நான் தயாராக இருக்கிறேன். என் மேல் ஊதி, உமது ஆவியால் என்னை நிரப்புவீராக. மன்னிக்கும் திறனை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்கு நான் தேர்வு செய்கிறேன்.