
அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. (1 கொரிந்தியர் 12:1)
கிறிஸ்தவ வரலாறு முழுவதும் ஆவியின் வரங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆவியின் வரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பற்றி நாம் அறிய்வேண்டியதின் முக்கியத்துவத்தையும் வேதம் நமக்குக் கற்பிக்கிறது. இருப்பினும், இன்று, இந்த விஷயத்தைக் குறித்து அனைத்து தகவல்களும் இருக்கும் போதிலும், பலர் இந்த வரங்களை முற்றிலும் அறியவில்லை. நான், பல ஆண்டுகளாக தேவாலயத்திற்கு சென்றேன். ஆவியின் வரங்களைப் பற்றிய எந்த ஒரு பிரசங்கத்தையும் அல்லது பாடத்தையும் நான் கேட்டதில்லை. அவை என்னவென்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவை எனக்குக் கிடைத்தன.
வேத்த்தில் சொல்லப்பட்டுள்ளது போல், பல வகையான “வரங்கள்” அல்லது “கொடைகள்” உள்ளன. அவை, “சில கிறிஸ்தவர்களை வேறுபடுத்தும் அசாதாரண வல்லமைகள்” (1 கொரிந்தியர் 12:4) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வரங்கள் வேறுபடுகின்றன, ஆனால் அவை அனைத்தும் ஒரே பரிசுத்த ஆவியிலிருந்து வந்தவை. இந்த வரங்களைப் பயன்படுத்துவதில் கடவுள் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது, அவை நம் வாழ்வில் ஒரு அற்புதமான வல்லமையை சேர்க்கின்றன. 1 கொரிந்தியர் 12:8-10, வரங்களை இவ்வாறு பட்டியலிடுகிறது: ஞானத்தின் வார்த்தை, அறிவின் வார்த்தை, விசுவாசம், சுகமாக்கும் வரம், அற்புதங்களைச் செய்தல், தீர்க்கதரிசனம், ஆவிகளைப் பகுத்தறிதல், பல்வேறு வகையான (வேறுபட்ட) மொழிகள், மற்றும் மொழிகளின் விளக்கம்.
இவை அனைத்தும் திறமைகள், வரங்கள், சாதனைகள் மற்றும் அமானுஷ்ய வல்லமை போன்ற ஆசீர்வாதங்கள் ஆகும். இதன் மூலம் விசுவாசி அசாதாரணமான ஒன்றைச் சாதிக்க முடியும். மேலும் அவை அனைத்து விசுவாசிகளுக்கும் கிடைக்கும். எந்த ஒரு ஆவிக்குரிய வரத்தின் செயல்பாட்டையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. எல்லா வரங்களையும் நாம் ஆர்வத்துடன் விரும்புகிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவை எப்போது, யார் மூலம் செயல்படுகின்றன என்பதைத் தேர்ந்தெடுக்கிறார். ஆவியின் வரங்களைப் பற்றி கடவுளின் வழிநடத்துதலைக் கேளுங்கள் மற்றும் அதை எதிர்பார்க்கவும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் பலவீனத்தில் வாழ வேண்டியதில்லை, ஏனென்றால் கடவுளுடைய வல்லமை இன்றும் ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கிறது.