
“விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” – 1 பேதுரு 5:9
தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் பெரிய மற்றும் வலிமையான காரியங்களை நீங்கள் விரும்பினால், உங்கள் எதிர்மறை மனநிலையின் வேருக்கு சென்று அவற்றைச் கையாள வேண்டும். ஏனெனில் வேர்கள் அகற்றப்படும் வரை, அவை தொடர்ந்து கெட்ட கனிகளை உற்பத்தி செய்யும்.
அனேக சமயங்களில் நம்முடைய நடத்தையின் மோசமான பலனைக் கையாள்வதிலேயே நாம் நம் வாழ்க்கையை செலவிடுகிறோம். ஆனால் பிரச்சினையின் வேருக்கு செல்லும் அளவு நாம் ஒருபோதும் ஆழமாக தோண்டுவதில்லை. கெட்ட வேரைக் கவனித்துக்கொள்வதற்கு ஆழமாக தோண்டுவது வேதனையானது. ஆனால் பிரச்சினையின் வேரைக் கண்டு கொள்வதற்கான ஒரே வழி இதுதான். சரியானதைச் செய்வதன் மூலம் வரும் மாற்றத்தின் வலியை அனுபவிக்கலாம், அல்லது பிசாசின் திட்டத்துடன் சென்று மாறாமல் அப்படியே இருப்பதன் வலியை அனுபவிக்கலாம். உங்கள் பழைய பழக்கங்களில் உங்களை என்றென்றும் நிலைத்திருக்க வைப்பதே அவனது குறிக்கோள்.
பிசாசுக்கு நாம் தொடக்கத்திலேயே எதிர்த்து நிற்க வேண்டுமென்று பேதுரு சொல்கிறார்
(1 பேதுரு 5:8-9 ஐக் காண்க). உங்களை ஒரு புதிய மகிமைக்கு அழைத்துச் செல்லும் வேதனை வேண்டுமா அல்லது அதே பழைய வேதனையை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் அந்த பழைய கெட்ட கனியை வைத்திருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இன்று பிசாசைத் தாங்கி, கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டத்தை அடைய பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுங்கள்.
ஜெபம்
தேவனே, பிசாசின் திட்டத்தை எதிர்கொள்ள எனக்கு உம்முடைய உதவி தேவை. மோசமான வேர்களைத் தோண்டி எடுப்பது வேதனையானது என்பதை அறிவேன். ஆனால் அது, என்னை உம்முடன் நெருங்கி வரச் செய்தால், அதை நான் செய்ய விரும்புகிறேன். நான் பிசாசை எதிர்க்கும்போது என்னை பலப்படுத்தும். உம்மைப் பின்தொடர என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.