
ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும். (அப்போஸ்தலர் 3:19)
கடவுள் தம்முடைய பிரசன்னத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார். பெரும்பாலான நேரங்களில் நாம் அவரைப் பார்க்க முடியாது, ஆனால், காற்றைப் போல, அவர் நம்மில் செய்யும் வேலையைக் காணலாம். நான் சோர்வாகவோ, விரக்தியாகவோ அல்லது எதையாவது பற்றி கவலைப்படுகிறவளாகவோ இருந்தால், கடவுளுடன் நேரத்தைச் செலவழித்த பிறகு, நான் புத்துணர்ச்சி அடைந்து, ஆவியின் காற்று என் மீது வீசியதை நான் அறிவேன்.
கடவுள் உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறார். பதில் உங்களுக்குள் இருக்கும் போது, உங்கள் உள்ளத்தில் விரக்தியாகவோ அல்லது சோர்வாகவோ இருக்காதீர்கள். நீங்கள் கடவுளுடன் நேரத்தை செலவிட முடியாத படி மிகவும் பிஸியாக இருந்தால், நீங்கள் உண்மையிலேயே மிகவும் பிஸியாக உள்ளீர்கள். எனவே உங்கள் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் நேரங்கள் கிடைக்கும் போது, வருத்தம், சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.
இயேசு செய்ததைப் போல கடவுளுடன் நேரத்தை செலவிட, வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கடவுளுடன் செலவிட வேண்டிய நேரத்தை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அங்கீகரிக்கும் வரை நீங்கள் காத்திருக்க முடியாது. நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதை, எப்போதும் யாராவது கண்டுபிடிப்பார்கள்! முடிந்தால் காலையில் முதலில் நேரத்தை ஒதுக்கி, பிறகு நாள் முழுவதும் பல “சிறிய ஆவிக்குறிய விடுமுறைகளை” எடுக்க முயற்சிக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு நீங்கள் செய்வதை நிறுத்துங்கள்; ஓய்வெடுத்து, ஆழ்ந்து மூச்சை எடுத்து, நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் மற்றும் உங்களுக்கு கடவுள் எவ்வளவு தேவை என்று அவரிடம் சொல்லுங்கள். மீதமுள்ள நேரம் அவர் முன்னிலையில் அமைதியாக இருங்கள். அற்புதமான முறையில் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சோர்ந்து போகாதீர்கள் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்; கர்த்தருடைய சந்நிதியில் புத்துணர்ச்சியுடன் இருக்க நேரம் ஒதுக்குங்கள்.