
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. (எரேமியா 6:10)
ஒவ்வொரு முறை கடவுள் நம்மிடம் பேசும் போதும், நாம் அவரைக் கேட்காதது போல் செயல்படும் போதும், அவரைக் கேட்பது மிகவும் கடினம் என்ற நிலையை அடையும் வரை நம் இருதயம் இன்னும் கொஞ்சம் கடினமாகி விடுகிறது. இறுதியில், நம்முடைய பிடிவாதமானது, அவரிடமிருந்து கேட்கும் நமது திறனை மழுங்கடிக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் செய்வது சரியானது என்று நமக்குத் தெரிந்ததை விட்டு விலகி, அவருடைய வழிநடத்துதலுக்கு முற்றிலும் செவி கொடாமல் இருக்கும் வரை நாம் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாக இருப்போம்.
இன்றைய வசனத்தில், கடவுள் எரேமியாவின் மூலம், தனது மக்களை, உடனடியாக வரும் அழிவைப் பற்றி எச்சரிக்க விரும்பினார், ஆனால் அவர்களின் காதுகள் விருத்தசேதனம் செய்யப்படாததால் (கடவுளுடன் உடன்படிக்கையில் இல்லை) அவர்களால் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியவில்லை. எவ்வளவு சோகம்!
இதற்கு நேர்மாறாக, யோவான் 5:30-ல் இயேசு பரிசுத்தப்படுத்தப்பட்ட, விருத்தசேதனம் செய்யப்பட்ட காதைக் கொண்டிருந்தார். வேதத்தில் கடவுளைக் கேட்பது பற்றிய மிக முக்கியமான வசனங்களில் இதுவும் ஒன்று என்று நான் நம்புகிறேன்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது”.
இயேசு ஒன்றைப் பற்றி, பிதாவின் சத்தத்தைக் கேட்டாலொழிய எதையும் செய்யவில்லை. நாம் ஒரு காரியத்திற்குள் நுழைவதற்கு முன்பு கடவுளின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால், நம் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் இருதயத்தைக் கேளுங்கள்.