“போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.” – ரோமர் 14:15
கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம், நம்முடைய வாழ்க்கை முழுவதையும் தேவனிடம் கொடுத்து, எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் (கொலோசெயர் 1:10). ஆயினும், வாழ்க்கையின் பொதுவான, அன்றாட பொறுப்புகளைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, “பரிசுத்தமான” தேவனுடன் நம்மை சரியாக உணரவைக்கும் “ஆவிக்குறிய” காரியங்களை விட அவற்றை வித்தியாசமாக நினைக்கின்றோம். உண்மையில், பொதுவான காரியங்களுக்கும், பரிசுத்தமான காரியங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் அனைத்தும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்; நாம் அதை அன்பான தூய இருதயத்துடன் செய்தால், அது பரிசுத்தமாகிறது. மளிகை கடைக்குச் செல்வது போன்ற பொதுவான பணிகளை நீங்கள் செய்யலாம், அதை, கடவுளின் மகிமைக்கும் கனத்திற்க்கும் நீங்கள் செய்யும் வரை, அது ஜெபத்தைப் போலவே பரிசுத்தமான செயலாக இருக்கும்.
இந்த பகுதியில் விடுதலையைக் கொண்டு வருவதற்கு வேதத்தில் ரோமர் 14 ஒரு சிறந்த அத்தியாயம். 5-6 வசனங்களின் எனது தனிப்பட்ட மொழிபெயர்ப்பு என்னவென்றால், ஒரு மனிதன் ஜெபத்தையும், வேத வாசிப்பையும் சாதாரண பணிகளை விட பரிசுத்தமானதாகக் கருதுகிறான். அதே சமயம் கர்த்தரிடத்தில் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கும் ஒரு நபர் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார் (அனைத்துமே பரிசுத்தமானது). ஏனென்றால் அவன் என்ன செய்தாலும், தேவனை கனப்படுத்தவே செய்கிறான்.
உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கடவுளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, நீங்கள் செய்யும் அனைத்தையும் அவருக்குக் கொடுப்பதன் மூலம் பரிசுத்தமாவதற்கு இன்று ஒரு தீர்மாணம் செய்யுங்கள்.
ஜெபம்
தேவனே, எனது முழு வாழ்க்கையும் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறேன், அதில் ஒரு பகுதி மட்டுமல்ல. எனது அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நான் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மை கனப்படுத்தவே நான் வாழ்கிறேன்.