
“கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.” – சங்கீதம் 94:12–13
வாழ்க்கையும், மக்களும் நம்மை ஏமாற்றும் போது, நாம் நிலையாக இருந்து நம் வாழ்க்கைக்காக தேவன் கொண்டிருக்கும் நோக்கத்தை தொடர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
சங்கீதம் 94:12-13 ஐ பாருங்கள். தேவன் நம்மை அமைதியாக வைக்கிறார் என்று சொல்லுகிறதை கவனியுங்கள். அது, நாம் நம்மை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆற்றலை அளிக்கிறது என்பதை கவனியுங்கள். நாம் தேவனுடைய பங்காளர்கள். நமக்கு பெலத்தை, ஆற்றலை அளிக்க வேண்டியது அவர் பங்கு. நம் பங்கோ பொறுப்பாக இருந்து அந்த ஆற்றலை உபயோகிக்க வேண்டும்.
பொறுப்பு என்பது ‘ நாம் பெற்றிருக்கும் ஆற்றுலுக்கேற்ப செயல்படுவதாகும்’. பொறுப்பற்றவன் தான் ஒன்றும் செய்யாமல், தேவனே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென விரும்புவான். ஆனால் உங்கள் உணர்ச்சிகள் உங்களை ஆள அனுமதிக்காதீர். ‘நான் என் கடைசி பரிதாப நிகழ்வை நிகழ்த்தி விட்டேன்’என்று உரக்க அறிவியுங்கள். நீங்கள் பொறுப்பை தவிர்க்காமல் அதை ஏற்றுக் கொள்ளும் போது, கடைசியிலே உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர்வீர்களென்று உங்களுக்கு வாக்களிக்கின்றேன்.
தேவன் உங்கள் மேல் கரிசனையாக இருக்கிறார் தான். ஆனாலும், அவர் உங்கள் பங்கை செய்ய மாட்டார். நீங்கள் அதை செய்ய உங்களுக்கு ஆற்றல் அளிக்கிறார். ஆனால் உங்களுக்காக அவர் செய்ய மாட்டார் என்று வலியுறுத்தி சொல்கிறேன். உங்களுக்காக அவர் திட்டம் பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதமான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள உறுதியாக நின்று பொறுப்பேற்றுக் கொண்டு தேவனுடன் இணைந்து செயல்படுங்கள் என்று சொல்கிறேன்.
ஜெபம்
தேவனே, அமைதியாக இருக்க தேவையான ஆற்றலை நீர் எனக்கு கொடுத்திருக்கிறீர் என்று உம் வார்த்தை சொல்கிறது. அதை இன்றே நான் பெற்றுக் கொள்கிறேன். என் உணர்ச்சிகள் என் வாழ்க்கையை நடத்த அனுமதிக்க மாட்டேன். நான் பொறுமையாக இருந்து, எப்படி செயல் பட வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படி செயலாற்றுவேன்.