“சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.” – பிலி 1:12,14
சில சமயங்களில் நாம் கடவுளுடைய வார்த்தையுடன் ஈடுபடுவதால் சத்துருவிடமிருந்து தாக்குதல்களை சந்திக்கிறோம். மாற்கு 4:17, வார்த்தையைக் கேட்டு சிறிது காலம் மட்டும் அதில் நிலைத்திருப்பவர்களைப் பற்றி பேசுகிறது. பின்னர் வார்த்தையின் காரணமாக பிரச்சினை அல்லது துன்பம் எழும்போது, அவர்கள் உடனே எரிச்சலடைந்து (அதிருப்தி, கோபம், மனக்கசப்பு) தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.
வார்த்தை நம்மை பலப்படுத்தும் என்று சாத்தானுக்குத் தெரியும். அதை மற்றவர்களிடம் பரப்புவதற்கு முன்பு அதை நிறுத்த விரும்புகிறான். ஆகவே வார்த்தையை உங்கள் இருதயத்தில் காத்துக்கொள்வதும், பிசாசு உங்களிடமிருந்து அதை திருட வரும்போது அதை எதிர்ப்பதும் மிக முக்கியம். அப்படி நீங்கள் செய்யும்போது, எதிரி கொண்டு வரும் சோதனைகள், உண்மையில் மற்றவர்களை தேவனிடம் கொண்டு செல்ல உதவும்.
பவுல் சொன்னார், தேவன் அவரை அனேக காரியங்களினூடே செல்ல அனுமதித்தார். ஏனென்றால் அது அவர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கையுடன் இருக்கவும், மேலும் அச்சமின்றி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் தைரியம் கொடுத்தது. பவுலின் சிறைவாசத்தின் போது கூட, அவருடைய உறுதியும், கடவுளால் பயன்படுத்தப்படுவதற்கான திறனும் தெளிவாகத் தெரிந்தது.
நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யப் போகிறோம் என்றால், சில மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்வோம். ஆனால் நாம் கடவுள்மீது விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நின்றால், அவர் நம்மை வெற்றி சிறக்க செய்வார், மேலும் இந்த செயல்பாட்டில் மற்றவர்களுக்கு நாம் ஒரு பெரிய ஊக்கமாக இருப்போம்.
ஜெபம்
தேவனே, நான் உம்மிலும், உம்முடைய வார்த்தையிலும் ஒவ்வொரு நாளும் நிலைத்திருக்க விரும்புகிறேன். சோதனைகள் என் வழியில் வரும்போது, நீர் அவற்றை என்னை பலப்படுத்தவும், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உம்முடைய வார்த்தையை சொல்லவும் பயன்படுத்த வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.