விசுவாச வரம்

விசுவாச வரம்

வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும். (1 கொரிந்தியர் 12:9)

ஆபத்தான மிஷனரி பயணம் அல்லது சவாலான சூழ்நிலை போன்ற குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், சில நபர்களுக்கு, கடவுள் விசுவாசத்தை பரிசாக அளிக்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்த வரங்கள் மக்களில் செயல்படும் போது, மற்றவர்கள் சாத்தியமற்றதாகக் கருதும் ஒன்றை செய்வதற்கு, அவர்கள் கடவுளை நம்ப முடியும். மற்றவர்கள் பயப்படும் காரியங்களில், அவர்கள் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

விசுவாசத்தின் வரத்தில் செயல்படும் ஒரு நபர், இந்த வரம் இல்லாத மற்றவர்களை விசுவாசமற்றவர்கள் என்று நினைக்காமல், கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் விசுவாச வரம், ஒரு தனிநபரிடம் செயல்படும் போது, கடவுள் அந்த நபருக்கு விசுவாசத்தின் அசாதாரணமான பகுதியைக் கொடுக்கிறார். அதன் மூலம் அவருடைய நோக்கம் நிறைவேறுகிறது. மற்றவர்களுக்கு தைரியத்தையும், ஆறுதலையும் கொண்டு வர கடவுளால் அவர் பயன்படுத்தப்படலாம். ஆனால் கடவுள் அவருக்குக் கொடுத்ததற்கு, அவர் பணிவாகவும் நன்றியுடனும் இருக்க வேண்டும். ரோமர் 12:3 கூறுகிறது, “அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.”

நாம் எதிர்கொள்ள வேண்டியதை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை கடவுள் எப்போதும் நமக்குக் கொடுப்பார். இருப்பினும், நம்பிக்கையின் பரிசு, ஒரு நபரை அசாதாரணமான தைரியமானவராக்குகிறது. அதில் செயல்படும் எவரும், இந்த தைரியம் கடவுளின் பரிசு என்பதை உணர்ந்து, எப்போதும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடினமான காரியங்களைச் செய்ய, கடவுள் உங்களுக்குக் கொடுக்கும் விசுவாசத்திற்கு நன்றியுடன் இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon