விவேகம்

விவேகம்

“இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.” – நீதி 16:21

இன்று நாம் அதிகம் கேட்காத ஒரு சொல் விவேகம். இதன் பொருள் “கவனமாக கையாளுதல்: சிக்கனம்.”

வேதத்திலே, விவேகம் அல்லது மதி என்றால், “கடவுள் நமக்கு அருளிய ஈவுகளை, வரங்களை நல்லபடியாக கையாளுகிறவர்களாக இருப்பது” என்பதாகும். அந்த ஈவுகளில் நேரம், ஆற்றல், பெலன் மற்றும் ஆரோக்கியம் – பொருள் உடைமைகள் கூட அடங்கும். அவை நம் சரீரத்தையும், மனதையும் ஆவியையும் உள்ளடக்கும்.

நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஈவுகள் வழங்கப்பட்டதைப் போலவே,  நம் ஒவ்வொருவருக்கும் அந்த ஈவுகளை நிர்வகிக்கும் திறன் வெவ்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளது.

அனேக மக்கள் தொடர்ந்து தங்கள் வரங்களையும், திறன்களையும் கடவுள் விரும்பாத வழிகளில் பயன்படுத்துகிறார்கள். பின் மிகவும் களைப்படைந்து விடுகின்றனர். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தவோ அல்லது நம்முடைய சொந்த இலக்குகளை அடைய நம்மை மிகவும் கடினமாக வருத்திக் கொள்வதற்குப் பதிலாக, நாம் கடவுளுக்கு செவிசாய்த்து, அவர் நமக்குச் சொல்வதை கேட்பது ஞானமானது.

மக்களைக் கவர்ந்து அவர்களின் தரத்திற்கு ஏற்ப வாழ முயற்சிப்பது விவேகம் அல்ல. விவேகம் என்பது உங்கள் வரங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கடவுளிடம் கேட்டு, பின்னர் அதற்கு கீழ்ப்படிவதாகும். இன்று கடவுளின் விவேகத்தைக் கற்றுக் கொண்டு அதை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள், இதன் மூலம் அவர் விரும்பிய வழியில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும்.


ஜெபம்

கடவுளே, நீர் எனக்குக் கொடுத்த எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல உக்கிராணக்காரணாக இருக்க விரும்புகிறேன். எனது வரங்களையும், திறன்களையும் உமக்காக மட்டுமே பயன்படுத்த நான் இப்போது முடிவு செய்கிறேன். உம்முடைய விவேகத்தோடும், ஞானத்தோடும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon