தைரியமாக இருங்கள்!

தைரியமாக இருங்கள்!

ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 28:1)

மக்கள் ஜெபிக்காததற்கும், கடவுளிடம் தங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தயங்குவதற்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தகுதியற்றவர்களாக உணர்வதுதான். அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக உணரவில்லை; அவர்கள் போதுமான அளவு ஆவிக்குறியவர்களாய் இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை. எனவே கடவுள் தங்களுக்குச் செவிசாய்ப்பார் என்று அவர்கள் நம்பவில்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம். நாம் அப்படி தவறு செய்யும் போது கடவுளின் மன்னிப்பையும், கிருபையையும் பெற வேண்டும். இது நாம் தவறு செய்தாலும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற அனுமதிக்கிறது.

நாம் கடவுளிடம் பேசும் போதும், அவரிடம் கோரிக்கைகளை வைக்கும் போதும், இயேசுவின் இரத்தத்தின் மூலம் நீதிமான்களாக்கப்பட்ட கடவுளின் பிள்ளைகள் என்ற நமது நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவருடைய சத்தத்தை நாம் தெளிவாகக் கேட்காமல் இருக்கலாம் அல்லது அவருடைய பதில்களைத் துல்லியமாக உணர முடியாமல் இருக்கலாம். “சரியான” விஷயங்களைச் செய்வதை அடிப்படையாகக் கொண்டது – “சரியான” வார்த்தைகளைச் சொல்வது, “சரியான” வழிகளில் நடந்துகொள்வது அல்லது “சரியான” மனப்பான்மையைக் கொண்டிருப்பது போன்றவற்றின் அடிப்படையில் நமது நீதி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நம்மை நாமே நீதிமான்களாக்கிக் கொள்ள முடியாது என்பதே உண்மை. நாம் நம்மை மதவாதிகளாக்கலாம், ஆனால் நம்மை நாமே நீதிமான்களாக்க முடியாது. உண்மையான விவிலிய நீதியானது நாம் சரியாகச் செய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது இயேசு நமக்குச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது. விசுவாசத்தினால் அவருடைய நீதி நம்முடையதாகிறது, அதை நாம் நம்பினால், நாம் படிப்படியாக மேலும் மேலும் சரியான நடத்தையைக் காட்டுவோம். ஆனால், கடவுள் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் நல்லவர். நாம் நல்லவர்களாய் இருப்பதால் அல்ல. நாம் ஜெபத்தில் தைரியமாக அவரை அணுகலாம் மற்றும் தினமும் அவரிடமிருந்து கேட்கலாம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் அவரை நம்பி, தைரியமாக ஜெபித்தால், உங்கள் தவறுகளை அற்புதங்களாக மாற்றுவார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon