ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். (கலாத்தியர் 6:10)
இன்றும் ஒவ்வொரு நாளும், உங்கள் நாளைத் தொடங்கும் போது மற்றவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி உங்களிடம் பேசும்படி கடவுளிடம் கேளுங்கள். நாம் கடவுளால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், அதனால் நாம் அவருக்கும், மற்றவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் கடவுள், ஆதாமிடமும், ஏவாளிடமும், தங்கள் எல்லா வளங்களையும் சேர்த்து கடவுளுக்கும், மனிதனுக்கும் சேவை செய்யும் படி சொன்னார். உண்மையிலேயே பெரிய ஆணோ, பெண்ணோ சேவை செய்பவராய் இருக்க வேண்டும். ஒரு தலைவன் கூட, சேவை செய்யும் தலைவனாக இருக்க வேண்டும்.
இயேசுவின் சீஷர்கள், தங்களில் யார் பெரியவர் என்று கேட்டதற்கு, பெரியவராக இருக்க விரும்புகிறவர் ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்று பதிலளித்தார் (மத்தேயு 20:26 ஐப் பார்க்கவும்). நீங்கள் கடவுளிடமிருந்து கேட்க ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் யாருக்கு உதவலாம் மற்றும் யாரை ஆசீர்வதிக்கலாம் என்பதைப் பற்றி உங்களிடம் பேசும் படி அவரிடம் கேளுங்கள். நமக்கு எது உதவும் என்பதைப் பற்றி மட்டுமே நாம் கடவுளிடமிருந்து கேட்க விரும்பினால், அவர், நாம் சுயநலமாக இருக்க உதவுவதில் ஆர்வம் காட்டாததால், அவர் அதிகம் பேசாமல் இருக்கலாம். நாம் உண்மையாகவே பிறர் மேல் அக்கறை கொண்டால், அவர்களுக்குச் சேவை செய்வதற்கான நமது முயற்சியின் நடுவே, நம்முடைய சொந்தப் பிரச்சனைகள் அதிக முயற்சி இல்லாமல் கடவுளால் தெய்வீகமாக தீர்க்கப்படுவதை நாம் அடிக்கடி காணலாம்.
கடவுளுடைய ராஜ்யத்தில், “வேலைக்காரன்” என்ற பதவி மிக உயர்ந்தது. கிறிஸ்து சேவை செய்ய வந்தார், சேவையை ஏற்பதற்காக அல்ல (பார்க்க மாற்கு 10:45). விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். தங்களுக்கு என்ன வேண்டும், எது தேவை என்று மக்கள் சொல்வதைக் கேட்டு, அதில் அவர்களுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்யும் போது, கிறிஸ்துவுடனான உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். ஏனென்றால் அவர் ஒரு வேலைக்காரன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இப்போதே ஜெபியுங்கள், இன்று மற்றவருக்கு உதவ நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கடவுளிடம் கேளுங்கள். அமைதியான, மெல்லிய குரலைக் கேட்டு, கீழ்ப்படிதலில் பிஸியாக இருங்கள்.