
“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” – 1 தெச 5:17
‘இடைவிடாமல் ஜெபியுங்கள்’என்ற வேதாகம வாக்கியத்தை கேட்டிருக்கின்றீர்களா? அனேகருக்கு அது பயத்தை ஏற்படுத்துகிறதாகவும், முடியாததாகவும் காணப்படுகின்றது. எப்படி ஒருவர், 24 மணி நேரமும் தலையைத் தாழ்த்தி முழங்காலிட்டு ஜெபிப்பது?
ஜெபத்தைப் பற்றி மிகவும் துல்லியமான விளக்கத்தை நாம் பெற்றிருக்க வேண்டும். அனேக வேளைகளில் நாம் ஜெபத்தை, ஒரு தனிமையான இடத்திற்கு சென்று, இந்த முழு உலகத்திலிருந்தும் நம்மை தணிமைப்படுத்தி கடைபிடிக்க வேண்டிய ஒரு செயல் முறையைப் பார்க்கிறோம்.
ஆனால் ஒரு எண்ணத்தை தேவனிடமாய் நேராக்குவது கூட ஒரு அமைதியான ஜெபத்திற்குரிய தகுதியைப் பெறுகிறது என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அது உண்மையே. ஜெபமானது தேவனுடன் சம்பாஷிப்பதாகும். எனவே வேதம் நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லும் போது, நாம் தேவனுடன் எப்போதுமே சம்பாஷித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமாகின்றது. அது ஒரு இரண்டு மணி நேர ஜெப வேளையாக இருக்கலாம் அல்லது நாள் முழுவதும் அவருடைய பிரசன்னத்தைப் பற்றிய உணர்வுடன் இருப்பதாக இருக்கலாம்.
தேவன் ஜெபத்தை சிக்கலானதாக மாற்றி இருக்கவில்லை. நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் ஜெபம் இன்றியமையாத, நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒன்றாக மாற்றி இருக்கிறார். எனவே, இன்று உங்கள் ஜெபத்தின் விளக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை நேசிக்கும் தேவனுடன் நீங்கள் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் உறவால் ஏற்படும் சந்தோசத்தை அனுபவிப்பீர்கள்.
ஜெபம்
தேவனே, ஜெபத்தை பற்றிய என்னுடைய விளக்கத்தை மாற்றி எப்பொழுதும் உம்முடன் உறவாடும் வழிகளை எனக்கு காட்டுவீராக. என் வாழ்வில் தொடர்ந்து இருக்கும் உம்முடைய பிரசன்னத்திற்காக உமக்கு நன்றி.