என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். (1 இராஜாக்கள் 8:28)
சில சமயங்களில், நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, சிலர் சொல்வதைப் போன்ற ஜெபச் சுமை அல்லது பரிந்து பேசும் சுமையைப் பெறுவீர்கள். ஒரு சுமை என்பது உங்கள் இருதயத்திற்கு வருவது. அது உங்களை பாரமாகவும், முக்கியமானதாகவும் உணரச் செய்கிறது; இதை தேவன் உங்கள் ஜெபத்தில் கொண்டு செல்லும்படி கேட்கிறார்; அது உங்களால் அசைக்க முடியாத ஒன்று. சில சமயங்களில் கடவுள் உங்களிடம் பேசலாம் அல்லது உங்களிடம் அந்த பாரத்தை குறித்து விளக்கிக் கூறலாம். மற்ற நேரங்களில் சுமை என்னவென்று கூட உங்களுக்குத் தெரியாது அல்லது நீங்கள் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்; நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பது மட்டுமே உங்களுக்கு தெரியும்.
சிலர் சில விஷயங்களுக்காக நிறைய ஜெபிக்க அழைக்கப்படுகிறார்கள். என் கணவர் அமெரிக்காவுக்காக நிறைய பிரார்த்தனை செய்கிறார். இஸ்ரவேலுக்காக எப்போதும் ஜெபிக்கும் மக்களை நான் அறிவேன். ஒரு பெண் என்னிடம் சொன்னாள், போரிலிருந்து திரும்பிய படை வீரர்களுக்காக அவள் ஜெபிப்பதாக. உலகில் உள்ள அனைத்து தேவைகளையும் கடவுள் உள்ளடக்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒரே காரியத்திற்காக ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், நாம் அப்படி செய்தால், எல்லா தேவைகளும் கவனிக்கப்படாது. கடவுள் உங்கள் இருதயத்தில் என்ன வைக்கிறார் என்பதைக் கவனியுங்கள், அதற்காக ஜெபிக்கவும்.
கடவுள் நம்மிடம் பேசும் வழிகளில் ஒன்று, மற்றவர்களைக் குறித்த பாரத்தைக் கொடுப்பதாகும். அவர் அடிக்கடி இதை வார்த்தைகள் இல்லாமல் செய்கிறார். இது நிகழும் போது, அவர்களுக்காக ஜெபிக்கும்படி அவர் கேட்கிறார். அவர் உங்களுக்குக் கொடுக்கும் சுமைகளின் மேல் கவனம் செலுத்துங்கள். அவர் உங்களிடம் ஜெபிக்க கேட்கும் போது உண்மையாக இருங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, உங்களுக்காக ஜெபிக்கும் ஒருவரை கடவுள் ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.