“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,” – எபி 5:7
ஜெபமானது மிகவும் வல்லமையுள்ளது, அது பூலோகத்திலிருக்கும் மனிதர்களுடைய இருதயங்களை பரலோகத்திலிருக்கும் தேவனுடைய இருதயத்துடன் இணைக்கிறது. நாம் ஜெபிக்கும் போது, தேவனுடன் தொடர்பு கொள்கிறோம். நாம் புரிந்து கொள்வதற்கும் அதிகமாக அவர் நம்முடைய அனுதின வாழ்க்கையிலே கிரியை செய்கிறார்.
இந்த பூலோகத்திலிருக்கும் மிகப்பெரிய வல்லமைகளில் ஒன்று ஜெபமே என்று நம்புகிறேன். இது ஒரு பெரிய கூற்றாக தோன்றலாம் ஆனால் அதுதான் உண்மை!
ஜெபமானது தேவன் கிரியை செய்ய கதவை திறக்கிறது. பரலோகத்தின் வல்லமை நம் வாழ்விலே ஞானத்தையும், வழிகாட்டுதலையும், உற்சாகத்தையும், அற்புதமான செயல்களையும் கொண்டு வர வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டிய செயல் ஜெபம். அது தேவனுடைய வல்லமையோடு நம்மை இணைக்கிறது. அதனால்தான் நாம் நினைப்பதற்கும் மேலான பெரிய வல்லமையாக அது இருக்கிறது. இயேசுவும் கூட இந்த உலகிலே இருந்த போது இந்த வல்லமையை ஜெபித்து பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
தேவனுடைய வல்லமை மட்டும் தான் ஒருவரின் வாழ்விலே சமாதானத்தையும், சந்தோசத்தையும், ஞானத்தையும், தகுதியையும், நோக்கத்தையும் கொண்டு வந்து எல்லாவிதமான அற்புதத்தையும் செய்ய இயலும்.
அந்த வல்லமை உங்கள் வாழ்விலே கிரியை செய்கிறதை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஜெபத்தை முன்னுரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, ஜெபத்தின் வல்லமை முற்றிலுமாக ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறதாக இருக்கிறது. நான் உம்முடன் இணைந்து நீர் என் வாழ்விலே கிரியை செய்வதைப் பார்க்கும் படியாக தொடர்ந்து ஜெபத்தின் மூலமாக உம்முடன் இணைந்திருக்க தீர்மாணிக்கிறேன்.