மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். (ரோமர் 12:6)

கடவுள் நமக்குக் கொடுத்த வரங்களில் செயல்படுவதற்கு நாம் அனைவரும் வித்தியாசமாக வரம் பெற்றுள்ளோம். இன்றைய வசனம் நமது வரங்களை நம்மீது இருக்கும் கிருபையின்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இரண்டு பேர் கற்பிக்க திறமை பெற்றவர்களாக இருக்கலாம். ஆனால் ஒருவர் மற்றவரை விட வலிமையான ஆசிரியராக இருக்கலாம். ஏனென்றால் அந்த குறிப்பிட்ட அழைப்புக்கு, கடவுளின் கிருபை அவருக்கு அதிகமாக உள்ளது. ஏன்? ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாம் விரும்பும் எவருக்கும் வரங்களைக் கொடுக்கிறார் (பார்க்க 1 கொரிந்தியர் 12:11). அவர் என்ன செய்கிறார் என்பதற்கு அவருக்கு காரணங்கள் உள்ளன. அதில் நாம் அவரை நம்ப வேண்டும். அவர் நமக்குக் கொடுப்பதற்கு, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்றவரின் வரத்தைக் கண்டு பொறாமைப்படக் கூடாது. நாம் ஒரே நேரத்தில் மக்களுடன் அன்பாகவும், அவர்களின் வரங்களைப் பார்த்துப் பொறாமைப்படவும் முடியாது.

என் கணவர் பொறாமைப்பட்டிருக்கலாம். ஏனென்றால் கடவுள் அவருக்குக் கொடுக்காத ஒரு பிரசங்க வரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட கிருபைக்கு வெளியே செயல்பட முயற்சித்தால் மகிழ்ச்சியாக இருக்காது என்பதை டேவ் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்திருந்தார். அவர் என்னைப் போல் இருக்க முயற்சித்தால், அவர் தனது மகிழ்ச்சியை இழக்க நேரிடும். டேவ் நிர்வாகம் மற்றும் நிதித்துறையில் அபிஷேகம் செய்யப்பட்டவர். என்னுடைய ஊழியத்தைப் போலவே இந்த ஊழியத்தில் அவருடைய பங்கும் முக்கியமானது.

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நீங்கள் என்ன செய்ய அழைக்கப்படுகிறீர்களோ, அதைச் செய்யுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசுவார். மேலும் உங்களுக்கு வழங்கப்பட்ட கிருபையைப் புரிந்து கொள்ள உதவுவார். மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள். ஆனால் அவர்கள் மீது அன்பாகவும், உங்கள் வாழ்க்கையில் அழைப்பு மற்றும் கிருபைக்கு உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: நீங்கள் அபாரமான வரங்கள் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு அற்புதமான நபர். உங்களை வேறு யாருடனும் ஒப்பிடத் தேவையில்லை.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon