
“ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.” – மத் 6:34
அனேகரைப் போன்று நானும் எனக்குப் பிடிக்காத, பிரயோஜனமற்ற காரியங்களை எதிர்க்கிறேன். ஒரு நாள் தேவன் என்னிடம், “ஜாய்ஸ், வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்” என்று சொன்னார். இது நம்மெல்லாருக்கும் தேவைப்படும் ஒரு பாடம் என்று நம்புகிறேன். அவர் என்னிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தாரென்றால் என்னால் எதுவும் செய்ய இயலாத காரியங்களுக்காக போராடிக் கொண்டிருக்கக் கூடாது என்பதே.
நாம் பிரயாணப்படுகையிலே, திடீரென்று எங்கோ அதிகப் போக்குவரத்து நெரிசலிலோ, ஏதோ விபத்தினாலோ அல்லது மோசமான கால நிலையினாலோ மாட்டிக் கொண்டோமேயென்றால், அதனை எதிர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. காலமோ அல்லது தேவனுடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட இடைபடுதலோ தான் அந்த சூழ்னிலையை மாற்றக்கூடும். ஏன் களைப்பாற்றிக் கொள்ளவும், வேறு ஏதாவது வகையிலே அந்த நேரத்தை உபயோகிக்கவும் முயற்சி செய்யக் கூடாது?
வாழ்க்கையின் நிதரிசனத்தில் அதை கையாள வேண்டிய திறனை, தேவன் நமக்கு தந்திருக்கிறார். அதனால் தான் அவர், நிகழ்காலத்தை மட்டும் நோக்கு என்று சொல்லுகிறார். நம் கட்டுப்பாட்டுகளுக்கு மீறிய காரியங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்போமேயென்றால் நாம் களைப்புற்று வரக்தியடைந்து விடுவோமென அறிந்திருக்கிறார்.
உங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் காரியங்களை மாற்ற முயன்று உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு முன் தேவன் வைத்திருக்கும் காரியங்களை மட்டும் செய்ய தீர்மாணியுங்கள். மீதியானதை அவர் பார்த்துக் கொள்வார்.
ஜெபம்
தேவனே, எல்லாவற்றையும் கட்டுப்படுத்த என்னால் இயலாது என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால் என்னால் உம்மை நம்ப இயலும். எனக்கு நீர் கொடுத்திருப்பதை சிறப்பாக செய்யவும், மீதியை உம்மிடம் கொடுக்கவும், இப்போதே தீர்மாணம் எடுக்கிறேன்.